இரட்டை காப்பியம்
இரட்டைக் காப்பியங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பி யங்கள் எனப்படுகின்றன.. இளங்கோவடிகளும் சாத்தனாரும் சமகாலத்தவராவர். சுண்ணகி வரலாற்றைச் சாத்தனார் கூற இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றி சாத்தனார் முன்னிலையில் அரங் கேற்றம் செய்தார்; இதே போன்று சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தை இளங்கோவடிகள் இருந்து கேட்டார் என்ற செய்தி இவ்விரு காப்பியங்களின் பதிகங்களால் அறியப்படுகின்றது. சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, மாதவி மூவரின், கதையை மையமிட்டது. மணிமேகலை, கோவலனுக்கும் மாதலிக்கும் பிறந்த மகள் மணிமேகலையைக் காப்பியத தலைவியாகக் கொண்டது மணிமேகலை மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள் என்று மாதவி குறிப்பிடுகிறாள் என்பதை மணிமேகலைக் காப்பியத்தால் அறிகிறோம். சிலப்பதிகாரத்தின் இறுதிவரிகள் 'மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்' என அமைவதால் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக எழுந்த காப்பியம் மணிமேகலை என்பது பெறப்படுகிறது. இரண்டு காப்பியங்களிலும் குடிமக்கள், காப்பியத் தலைமையேற்றல், முப்பது காதைகள் என்ற அமைப்பு. பதிகம், தனியாகக் கடவுள்வாழ்த்து இடம் பெறாமை, முற்பிறப்பு நம்பிக்கைகள், ...